அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள் மாறாட்ட புகார் : கோட்டாட்சியர் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம் செய்து மாடு பிடித்து முதல் பரிசு பெற்றதாக கூறப்பட்ட புகார் குறித்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கண்ணன் என்பவர் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இப்போட்டியில் 2- வது இடம் பிடித்த மாடு பிடி வீரர் கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியர் அன்பழகனை நேரில் சந்தித்து, ஆள் மாறாட்டம் குறித்து புகார் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், வீடியோ காட்சிகள், ஆவணங்களுடன் விசாரணை நடத்தி,அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Comments