கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்து வரும் புனே சீரம் நிறுவனத்தில் தீ விபத்து, 5 பேர் உடல் கருகி பலி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
டெர்மினல் 1 நுழைவு வாயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வரும் கட்டிடத்தில் 4வது மற்றும் 5வது தளத்தில் தீ பற்றியதை அடுத்து, உடனடியாக 10 வாகனங்களில் தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக புனே மேயர் முரளிதர் தெரிவித்தார். வெல்டிங் பணியின் போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். கோவிஷில்டு கொரோனா தடுப்பு மருந்துக்கோ, மருந்து தயாரிக்கும் பகுதியிலோ பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments