புனே : 4 கிலோ நான் வெஜ் உணவு சாப்பிட்டால் , ராயல் என்ஃபீல்ட் பைக் இலவசம்!

0 53506

கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் , 4 கிலோ நான் வெஜ் உணவை சாப்பிட்டால் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் இலவசம் என்று ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

புனே நகரத்தில் அதுல் வாய்கர் என்பவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின், ஹோட்டலில் பிரமாண்ட தட்டுகளில் வழங்கப்படும் நான் வெஜ் ரகங்கள் வெகு பிரபலம். ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு, மால்வானி மீன் சாப்பாடு உள்ளிட்ட 6 வகை உணவு வகைகள் இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு ரக உணவும் ரூ.2,500 மதிப்புடையது. இந்த நிலையில், கொரோனா காரணமாக இவரின் ஹோட்டலில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதனால், தன் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 4 கிலோ எடை கொண்ட உணவு பிளேட்டை ஒரு மணி நேரத்தில் காலி செய்தால் ராயல் புல்லட் பைக் பரிசாக வழங்கப்படும் என்று அதுல் அறிவித்தார்.

பிரமாண்ட பிளேட்டில் 12 வகையான நான் வெஜ் உணவுகள் இடம் பெற்றிருக்கும். Fried Surmai, Pomfret Fried Fish, Chicken Tandoori, Dry Mutton, Grey Mutton, Chicken Masala and Prawn Biryani உள்ளிட்ட உணவுகள் தட்டு நிறைய இருக்கும். 55 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பிரமாண்ட உணவு ரகங்களை தயார் செய்வார்கள். ஒரு மணி நேரத்தில் இந்த தட்டை காலி செய்தால் ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக கிடைக்கும். பல இளைஞர்கள் கலந்து கொண்டு அதுல் வாய்கர் அறிவித்த போட்டியில் வெற்றி பெற முயன்றனர். ஆனால், ஒரே ஒருவர்தான் வெற்றி பெற்றுள்ளார். சோலாப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் சோம்நாத் பவார் என்பதாகும்.

எனினும், விடா முயற்சியாக ஒரு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட பல இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். வெற்றி பெறுவர்களுக்கு வழங்குவதற்காக அதுல் வாய்கர் ரெஸ்டாரன்ட்டில் எப்போதும் 5 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு இந்த குறைந்தது 65 பேர் பிரமாண்ட உணவு தட்டை காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஹோட்டல் உரிமையாளர் அதுல் வாய்கர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments