பியூச்சர் குழுமத்தை ரூ. 24,713 கோடிக்கு ரிலையன்சுக்கு விற்க செபி ஒப்புதல்

0 2005
பியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துக்கு சுமார் 24ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கும் உடன்பாட்டுக்குப் பங்குச்சந்தை வாரியமான செபி ஒப்புதல் அளித்துள்ளது.

பியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் குழுமத்துக்கு சுமார் 24ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கும் உடன்பாட்டுக்குப் பங்குச்சந்தை வாரியமான செபி ஒப்புதல் அளித்துள்ளது.

சில்லறை விற்பனை, மொத்த விற்பனை, சரக்குப் போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் ஆகிய தொழில்களைக் கொண்ட பியூச்சர் குழுமத்தை 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்த உடன்பாடு, பியூச்சர் குழுமம் தங்களுடன் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு எதிரானது எனக் கூறி அமேசான் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

ஆனால் ரிலையன்ஸ் - பியூச்சர் உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ள செபி, இது டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமேசான் தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments