கன்னட நடிகை ராகினி திவேதிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
போதை பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகை ராகினி திவேதிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும், கடத்தல் மற்றும் விநியோகம் செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் நடிகை ராகிணி திவேதி கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமீன் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, ராகிணி திவேதி வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஒரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றும், இருப்பினும் அவர் 140 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments