பிரைவசி பாலிசி மாற்றங்கள் குறித்து வாட்ஸ்அப் மீண்டும் விளக்கம்
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியில் செய்யப்பட்ட மாற்றங்கள், பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்க எந்த வகையிலும் துணைபோகாது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி பிரைவசி பாலிசியில் மாற்றங்களை செய்த வாட்ஸ்அப், டேட்டாக்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட பிற நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ளப்படும் என கூறியிருந்தது.
மத்திய அரசு, பிரைவசி மாற்றங்கள் தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி, பயனாளர்களை நிர்ப்பந்திகும் வகையிலான ஒருதலைப்பட்சமான மாற்றங்களை ஏற்க முடியாது என கடிதம் அனுப்பியிருந்தது.
எதிர்ப்புகளால் பின்வாங்கிய வாட்ஸ்அப், பிரைவசி பாலிசி மாற்றங்களை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தது. அந்த மாற்றங்கள் பயனாளர்களின் டேட்டாக்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்க எந்த வகையிலும் துணைபோகாது என்று தற்போது விளக்கம் அளித்துள்ளது.
Comments