கலாசலா… கலசலா… வடக்கே கேட்டுப்பாரு.. என்னப்பத்தி சொல்லுவான்..! குடிகாரப் பெண் ரகளை

0 14711

திருவள்ளூரில் பார்ட்டிக்கு சென்று விட்டு போதையில் ஜீப் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 21 வயது வட மாநில பெண் ஒருவர், போலீசாரிடம் வம்பு செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டிற்கே இனி வரபோவதில்லை என்று உளரிய குடிகார பெண்ணின் விபரீத நடவடிக்கைகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கால் மேல் கால் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்கு போலீசிடம் ஆங்கிலத்தில் பேசி வம்பிழுக்கும் இவர் தான் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது குடிகார பெண் நித்து..!

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்த நித்து, ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் போதையேற்றியுள்ளார்..!

அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை வெளியே ஓட்டி வந்த நித்து, சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த டிராவலர் வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். போதையில் வாகனத்தை தொடர்ந்து ஓட்டிச்செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்களிடம் போதையில் வம்பிழுத்தார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். போதை தலைக்கேரிய நிலையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிய அந்தப்பெண் பிரிவினைவாதம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தான் தமிழ் நாட்டிற்கு வந்ததே தவறு என்றும் இனி ஒரு போதும் தமிழ் நட்டிற்கு வர போவதில்லை என்றும் மற்றவர்கள் தவறு செய்தது போன்று உளறினார் வட நாட்டு குடிகாரப்பெண் நித்து..! நீண்ட நேரமாக நின்று உரண்டை இழுத்த அந்த பெண்ணின் செல்போனை பெற்ற போலீசார், அவரது நண்பர்களை வரவழைத்தனர்.

நண்பர்கள் சமாதானப்படுத்தியும் போலீசாரை எட்டித்தள்ளி வம்பிழுக்க கூடியிருந்த இளைஞர்கள் அவரை ரவுண்டு கட்ட ஆவேசமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

போதையில் உளறிக்கொட்டிய அந்தப்பெண்ணை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர் போலீசார்.

அந்த பெண் ஓட்டி வந்த ஜீப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காலையில் போதை தெளிந்து பெற்றோருடன் வந்த பின்னர் நித்துவுக்கு வாயை பொத்திக் கொள்ளும் அளவுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ள காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போதை ஆண்களை மட்டுமல்ல, மதுவுக்கு அடிமையான பெண்களையும் பாதை மாற்றி தெருவில் தவிக்கவிட்டுவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments