மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மீதான பாலியல் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படாது - சரத்பவார்

0 1013
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மீதான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மீதான பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சமூகநீதித்துறை அமைச்சராக உள்ள தனஞ்சய் முண்டே தன்னைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஒரு பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்துக் கருத்துக் கூறிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்குமுன் அவர் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமாக இருக்காது எனத் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments