'எத்தனையோ விருந்து சாப்பிட்டுருக்கேன், ஆனா இது வேற லெவல்!'- பழங்குடி மக்கள் பஃபே விருந்தால் நெகிழ்ந்த கனி மொழி

0 34910
10 வகையான கிழங்குகளுடன் கனி மொழிக்கு விருந்து

கன்னியாகுமரி அருகே தச்சமலை கிராமத்தில் கனிமொழி எம். பி- க்கு 10 வகையான கிழங்குகளை சமைத்து பழங்குடியின மக்கள் பப்பே விருந்து வழங்கி நெகிழ வைத்தனர்.

தமிழகத்தின் முக்கிய உணவு வகைகளில் கிழங்குகள் முக்கியமானவை. அவற்றில், பல கிழங்கு வகைகள் அருகி போய் விட்டன. பொங்கல் சமயத்தில் மட்டுமே கிடைக்கும் சிறு கிழங்கு என்ற கிழங்கு மிகுந்த ருசியுடையதாக இருக்கும். சிறு கிழங்கு தோற்றத்தில் சேப்பக் கிழங்கு கருணைக் கிழங்கு மாதிரிதான் சற்று சிறியதாக இருக்கும். நெல்லை, சங்கரன் கோவில் போன்ற பகுதிகளில் விளையக்கூடியது. டிசம்பர் ஜனவரி மாதங்களில் அதிகளவில் கிடைக்கும். இந்த கிழங்கில் மாவுச் சத்து புரத சத்து அதிகம்.

இதனால், கண் பார்வை , ரத்த அழுத்தம் , எலும்பு பலம் பெற சிறு கிழங்குகளை சாப்பிடுவது நல்லது. ஆனால், இத்தகையை கிழங்கு ரகங்களை இப்போது நாம் மறந்து விட்டோம். நகரப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கிழங்கு வகைகள் பற்றியும் அவற்றை பக்குவமாக சமையல் செய்வது குறித்து தெரிந்தவர்களும் குறைவு. அந்த கிழங்குகளை பக்குவமாக சமைக்கவும் தெரியாது. அந்த வகையில், நகரப்பகுதியை சேர்ந்த கனி மொழி எம்.பிக்கு 10 வகையான கிழங்குகளை கொண்டு காட்டுக்குள் பப்பே விருந்து நடத்தி பழங்குடியின மக்கள் நெகிழ வைத்து விட்டனர்.image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடியலை நோக்கி என்ற பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஈடுபட்டு வருகிறார் . பேச்சிப்பாறை அணையில் இருந்து படகு வழியாக பயணித்து மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் உள்ள தச்சமலை கிராமத்துக்கு நேற்று கனி மொழி சென்றார். பின்னர், தச்சமலை கிராமத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கனி மொழி பேசினார். அப்போது, மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்ததும் தீர்த்து வைக்கப்படும் என்று கனி மொழி அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

தொடர்ந்து பழங்குடியின மக்கள் ஏற்பாடு செய்து இருந்த விருந்திலும் கனி மொழி கலந்து கொண்டார். மரச்சீனி ,சேனை,சீனிகிழங்கு ,சிறுகிழங்கு கருணைக்கிழங்கு உட்பட காட்டில் பழங்குடியின மக்கள் விளைவித்த 10 வகை கிழங்குகளுடன் பப்பே விருந்து நடைபெற்றது. மேலும், பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி கிழங்கு வகைகளை தயாரித்திருந்தனர். பழங்குடியின மக்கள் அன்புடனும் பாசத்துடனும் வழங்கிய இந்த விருந்தில் கலந்து கொண்ட கனிமொழி கிழங்கு வகைகளை ஆசையுடன் ருசித்தார்.

'எத்தனையோ விருந்து சாப்பிட்டுருக்கேன் , ஆனா இது வேற லெவல்' என்று கழி மொழி நெகிழ்ந்து போனார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments