தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48மணி நேரத்திற்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவவும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments