ஆந்திராவில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்த நவரத்தின திட்டங்களில், வீடு வீடாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டமும் ஒன்று.
ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல 830 கோடி ரூபாய் செலவில், வாங்கப்பட்ட 9,260 வாகனங்களின் செயல்பாட்டை விஜயவாடாவில் ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அம்மாநிலத்தில் 50 வீடுகளுக்கு ஒரு நபர், சுய உதவி குழு பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளர். அவர்கள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Comments