கால் மேல் கால் போட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு: வட மாநில போதை பெண்ணிடத்தில் சிக்கி தமிழக போலீஸ் தவிப்பு!

0 114088

நள்ளிரவில் மது குடித்து விட்டு விபத்தை ஏற்படுத்திய வட மாநிலத்தைச் சேர்ந்த பெண், தன் ஜீப்பில் உட்கார்ந்து நீங்கள் யார்? என்று கால் மேல் கால் போட்டு போலீஸாரிடத்திலேயே விசாரித்த சம்பவம் திருவள்ளூரரில் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரி நித்து. தற்போது, 21 வயதான இவர், திருவள்ளூர் அருகேயுள்ள மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சக நண்பர்களுடன் பயிற்சிக்கு வந்துள்ளார்.தன் நண்பர்களுடன் அங்குள்ள பகுதியிலேயே தங்கி இருந்துள்ளர். பயிற்சி நிறைவை முன்னிட்டு சக நண்பர்களுடன் மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விருந்தில் நித்து அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர், தனது ஜீப்பை அவரே ஓட்டி வந்துள்ளார். ஜீப் கிளம்பிய சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.image

தகவல் அறிந்த டி.எஸ்.பி துரைபாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். மது போதையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் நீங்கள் யார் என்னிடத்தில் விசாரணை செய்ய? என்று நித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தன் ஜீப்பில் சென்று அமர்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு நீலாம்பரி போல வில்லத்தனம் செய்தார். பின்னர், அங்கிருந்து மீண்டும் போலீஸாரிடத்தில் வந்து , தன்னை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லுமாறு பிடிவாதம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நள்ளிரவில் பெண் ஒருவர், போலீஸாரிடத்தில் தகறாறு செய்வதை கண்டு அதிர்ந்தனர். 

தொடர்ந்து , அந்த பெண்ணின் நண்பர்களிடம் செல்போனில் தகவலை கூறிய போலீஸார், அவர்களிடத்தில் பெண்ணை ஒப்படைத்தனர். தன் நண்பர்களிடத்திலும் வாக்குவாதத்தில் நித்து ஈடுபட்டார். பின்னர், பெரும் பாடு பட்டு நித்துவை அவரின் நண்பர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். நித்து ஓட்டிய ஜீப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில் , பெண் என்பதால் தகராறில் ஈடுபட்ட அவரை கைது செய்யவில்லை. பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு வர கூறியிருக்கிறோம். பின்னரே வழக்குப் பதிவு செய்யப்படும் என்கின்றனர்.

இந்த சம்பவத்தால் மணவாளநகர் பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments