ஏழு மாதங்களில் 5 செ.மீ வளர்ந்த இளைஞர் - செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா?

0 7018

னக்குப் பிடித்த கூடைப் பந்து ஹீரோக்களைப் போல உயரமானவனாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்க வாலிபர் ஒருவர் 55 லட்சம் ரூபாய்க்கு வலி மிகுந்த அறுவை சிகிச்சை செய்து, தனது உயரத்தை 5 செ.மீ அதிகரித்த விநோத சம்பவம் நடந்துள்ளது.

அந்த இளைஞரின் பெயர் அல்போன்சோ புளோரஸ் ( Alfonso Flores ), 28 வயதாகும் அல்போன்சோ அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாசில் ( Dallas ) வசித்து வருகிறார். கல்லூரியில் படித்துவரும் அல்போன்சோ பகுதி நேர எழுத்தாளராகவும் பணிபுரிகிறார். அல்போன்சோவுக்கு 12 வயது இருக்கும்போதே, அவருக்கு மற்றவர்களை விடவும் உயரமானவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அந்த ஆசையைத் தனது 28 வது வயதில் நிறைவேற்றியுள்ளார். பலரது எச்சரிக்கையையும் மீறி cosmetic limb-lengthening அறுவை சிகிச்சை செய்துகொண்டு 5 அடி 11 இன்ச் உயரத்திலிருந்து 6 அடி 1 இன்ச் உயரத்துக்கு ஏழு மாதங்களில் வளர்ந்துள்ளார்.

லாஸ் வேகாசில் உள்ள தி லிம்ப் பிளாஸ்ட்எக்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ( The LimbplastX Institute ) ஹார்வர்ட் பயிற்சி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின் டெபிபர்ஷாட் (Harvard-trained orthopedic surgeon Dr Kevin Debiparshad ) என்பவர் இந்தக் கடினமான அறுவை சிகிச்சையை அல்போன்சோவுக்கு செய்தார். ஏழு மாதங்களாக மேற்கொண்ட தொடர் சிகிச்சையின் பயனாக அல்போன்சா இப்போது, ஆறு அடி உயரத்துக்கு வளர வேண்டும் என்ற தனது கனவை அடைந்துள்ளார்.

ஒரு முறை தொடை எலும்பு நீட்டிப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் குறைந்தது 75000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். அல்போன்சா தனது உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சைக்கு மட்டும் 84000 டாலர் செலவழித்துள்ளார். அதற்கடுத்து பராமரிப்பு செலவுகளுக்காக ரூ. 14,000 டாலர் முதல் 20,000 டாலர்கள் வரை செலவாகும். இப்படியாக, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 55 லட்சம் அளவுக்கு செலவு செய்து தனது உயரத்தை அதிகரித்துள்ளார் அல்போன்சோ.

இது குறித்து அல்போன்சோ, “5 அடி 11 இன்ச் என்பது நல்ல உயரம் என்பதை அறிவேன். ஆனால், பெரும்பாலான மக்கள் உயரமாக இருப்பதையே விரும்புகிறார்கள். நான் விரும்பும் கூடைப்பந்து ஹீரோக்களும் உயரமானவர்களாக இருக்கிறார்கள். என் தந்தையும் நல்ல உயரம். அதனால், நானும் அவர்களைப் போல உயரமாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளேன். இதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் அச்சம் அடைந்தனர். சிலர் நான் பைத்தியம் என்றும் தேவையற்றது என்றும் கூறினர். நான் ஹீரோவாக இருக்க விரும்பினேன். அதை இப்போது நிறைவேற்றியுள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments