சசிகலா உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..?

0 7757
சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ஆர்டி-பிசிஆர் பரிசோதனையிலும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மூச்சுத்திணறல் குறைந்து உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ஆர்டி-பிசிஆர் பரிசோதனையிலும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு மூச்சுத்திணறல் குறைந்து உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறை மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா விரைவுச் சோதனையில் நெகடிவ் என வந்துள்ளது.

சாதாரண வார்டுக்கு இரவு 8 மணிக்கு மாற்றப்பட்ட நிலையில்,  இரவு 2 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்பொழுது மூச்சுத்திணறல் குறைந்து சகஜ நிலையில் உள்ளார் என்றும், தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களுக்கு சசிகலா மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments