மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

0 2978
மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்கிற வரம்பைக் கடந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்கிற வரம்பைக் கடந்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் முழு வேகம் பெற்றுள்ளன.

இதனால் உற்பத்திப் பொருட்களின் விற்பனை முந்தைய ஆண்டுகளைவிட உயர்ந்து பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

இந்நிலையில் இன்று  ஒன்பதரை மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 305 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக ஐம்பதாயிரம் என்கிற வரம்பைக் கடந்து ஐம்பதாயிரத்து 97 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 89 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 733 ஆக இருந்தது. மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 4 விழுக்காடு வரை உயர்ந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments