கோவையில் ஆன்லைன் ட்ரேடிங் செய்து தருவதாகக் கூறி ரூ.2.60 கோடி மோசடி
கோவையில் ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு இவருடன் பணிபுரிந்த பழநியை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், தான் ஆன்லைன் டிரேடிங் தொழிலில், முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித்தருவதாகக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய சிவக்குமார், அவரிடம் சில லட்சங்கள் முதலீடு செய்துள்ளார். அதே போல் பழனியை சேர்ந்த நாகேந்திரன் 50 லட்சமும், மதுரை மற்றும் சென்னை மாவட்டங்களில் பல நபர்களிடமும் இதே போல டிரேடிங் செய்வதாக கூறி 2 கோடியே 60 லட்சம் ரூபாய் வரை ஜெகதீஷ் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவை காவல்துறையினர் ஜெகதீஷைத் தேடி வந்தனர். இந்நிலையில் நாகர்கோவிலில் பதுங்கியிருந்த ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments