பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2 வது நாளாக சோதனை
இயேசு அழைக்கிறார் என்கிற மதபிரச்சார அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் முழுவதும் 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயேசு அழைக்கிறார் என்ற அறக்கட்டளை சார்பில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பால்தினகரன் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி கிடைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
கல்வி நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம், ஜெபக் கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் பால் தினகரன் மீது புகார் எழுந்தது. இந்த சோதனையில் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments