அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதையடுத்து, சொந்த ஊரான துளசேந்திரபுரத்தில் கிராம மக்கள் கொண்டாட்டம்
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அமெரிக்காவின் 49வது துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். புதிய துணை அதிபருக்கு அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா,கிளிண்டன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பதவியேற்றபின் கமலா ஹாரிஸ் குடும்பத்துடன் நடந்து வந்து பொதுமக்களின் வாழ்த்துக்களைப் பெற்றார்.
இந்நிலையில் கமலா ஹாரிசின் பூர்வீக ஊரான துளசேந்திரபுரத்தில் உள்ள தர்ம சாஸ்தா குலதெய்வ கோவிலில் பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பதவியேற்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்த அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
Comments