கொதிகலனை சரி செய்யும் போது கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு

0 1419

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அந்நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கட்டடத்தில் கொதிகலன் ஒன்றை சிலர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அதனருகில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments