நடிகை சித்ராவை கடித்து குதறிய மனித மிருகம்..! நண்பர் பரபரப்பு வாக்குமூலம்

0 256621

நடிகை சித்ராவை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் மிருகம் போல கடித்து சித்ரவதை செய்ததாக கணவர் ஹேம்நாத் மீது அவரது நண்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தினி என்பதை நிரூபிக்க ஹேம்நாத் செய்த விபரீத சேட்டைகளையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார் .

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக ஆடியோ வெளியிட்ட ஹேம்னாத்தின் நண்பர், சித்ராவின் மரணம் குறித்து ஹேம் நாத் மீது பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவரது நடவடிக்கைகள் மிருகத்தனமாக இருந்ததாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை காரணம் காட்டி அவன் சித்ராவை கடித்து குதறி அணுஅணுவாக சித்ரவதை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

மருத்துவரான தனது மனைவியிடமும், தனக்கு தெரிந்த மருத்துவரிடமும் சென்று சித்ராவின் கன்னித்தன்மையை பரிசோதிக்க எளிய வழிமுறையை கூறுமாறு ஹேம்நாத் கேட்டதாகவும், அவரது டார்ச்சரால் சித்ரா நரக வேதனை அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

சித்ராவிடம், பத்தினி என்பதை நிரூபிக்க செத்துப்போ என்று மிரட்டி அடித்து உதைப்பதை ஹேம்நாத் வாடிக்கையாக்கியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஹேம்நாத்தை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற 4 முக்கிய பிரமுகர் உதவுவதாகவும், சித்ராவுக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தும் ஹேம்நாத்தின் தந்தைக்கு தெரியும் என்றும் ஹேம்நாத்தை எக்காலத்திலும் ஜாமீனில் விடக்கூடாது என்றும் ஆதங்கம் தெரிவித்துள்ளார் செய்யது ரோகித்.

அதே நேரத்தில் சித்ராவின் மரணம் நிகழ்ந்த அன்று ஹேம் நாத்தின் உறவினர்களும் சக நண்பர்களும் தன்னை தொடர்பு கொண்டு உண்மையை மறைக்க சொன்னதாகவும், நடிகை சித்ராவுக்கு எதிராக அபாண்டமான பழியை ஹேம் நாத்தின் தந்தை மீடியாக்களில் தெரிவித்து வருவதால், ஹேம்நாத்தின் கொடூர முகத்தை ஊருக்கு அம்பலப்படுத்தி வருவதாக கூறியுள்ளார் செய்யது ரோகித். 

சித்ரா மர்ம மரண வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் செய்யது ரோகித்திடமும் விரிவான விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி ஹேம் நாத்திற்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments