திருச்சி ஜல்லிக்கட்டு:சிறந்த காளைக்கான பரிசை தட்டிச் சென்றது அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை
திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை சிறந்த காளைக்கான பரிசை தட்டிச் சென்றது.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 589 காளைகளும் 369 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 39 பேருக்கு காயம் ஏற்பட்டது. போட்டியில் 14 மாடுகளை பிடித்து முதல் இடத்தைப் பெற்ற சிவாவுக்கு இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது.
சிறந்த காளைக்கான பரிசை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சோழன் என்கிற செவலை காளை தட்டிச் சென்றது.
Comments