பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2,691 கோடி ரூபாய் நிதியுதவி

0 5745
வீட்டுவசதி திட்ட பயனாளிகளுக்கு 2,691 கோடி ரூபாய் நிதியுதவியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.

வீட்டுவசதி திட்ட பயனாளிகளுக்கு 2,691 கோடி ரூபாய் நிதியுதவியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளுக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.

காணொலி வழியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே, இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணை தொகை மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை என 2 ஆயிரத்து 691 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments