"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சசிகலாவுக்கு பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சசிகலாவிற்கு திடீர் உடல் நிலைக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களுரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சிவாஜி நகர் பவுரிங் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.
அவரை மருத்துவமனை ஊழியர்கள் சக்கர நாற்காலி மூலம் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு சசிகலாவிற்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments