அசாமில் குளிர்பதனக் கிடங்கில் கோவிஷீல்டு தடுப்பு மருந்து உறைந்தது குறித்து விசாரணை நடத்த நலவாழ்வுத் துறை உத்தரவு
அசாமின் சில்ச்சாரில் ஆயிரம் முறை செலுத்தும் அளவிலான கோவிஷீல்டு தடுப்பு மருந்து உறைந்து வீணாக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து அனுப்பிய 100 பாட்டில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து சில்ச்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மருந்து பாட்டிலிலேயே உறைந்துபோனது. இது குறித்து விசாரணை நடத்த அசாம் மாநில நலவாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. உறைந்துபோன மருந்தின் செயல்திறன் பற்றி அறிய மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Comments