பொதுவெளியில் மீண்டும் தலைகாட்டிய ஜாக் மா..!

0 2920
அலிபாபா நிறுவனர் ஜேக் மா அக்டோபர் மாதத்துக்குப் பின் மீண்டும் பொதுவெளியில் தலைகாட்டியுள்ளார்.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா அக்டோபர் மாதத்துக்குப் பின் மீண்டும் பொதுவெளியில் தலைகாட்டியுள்ளார்.

அலிபாபா நிறுவனம் சீனாவில் இணைய வழியில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதன் நிறுவனர் ஜாக் மா, தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நிலையில் அக்டோபர் 24 முதல் அதில் பங்கேற்கவில்லை.

இதனால் அவரின் உடல்நலம் குறித்துப் பல்வேறு வதந்திகள் உலவிய நிலையில், ஆசிரியர்கள் நூறு பேர் கலந்துகொண்ட இணையவழிக் கலந்துரையாடலில் இன்று அவர் பங்கேற்றார்.

இதனால் மூன்று மாதங்களாக நிலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹாங்காங் பங்குச்சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று ஒரேநாளில் 6 விழுக்காடு உயர்ந்துள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments