நன்றி மறக்காத பருந்து... காயமடைந்த போது சிகிச்சையளித்தவரை அடிக்கடி பார்க்க வருகிறது!

0 32339
picture courtesy: mathrubhumi

 

கேரளாவில் 3 ஆண்டுகளுக்கு முன் காயமடைந்த பருந்துக்கு சிகிச்சையளித்து காப்பாற்றியவரை அடிக்கடி வந்து அந்த பருந்து பார்த்து செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தி தொண்டிமால் என்ற இடத்தை சேர்ந்தவர் சுனீத். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, காக்கைகளால் தாக்கப்பட்ட பருந்து ஒன்று சாலையில் கிடந்தது. அந்த பருந்தை வீட்டுக்கு எடுத்து வந்த சுனீத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர், அதன் காயத்துக்கு சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றினார். இதனால், சுனீத் வீட்டில் உள்ளவர்களுடன் பருந்து நன்றாக பழகி விட்டது. பருந்துவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 செலவழித்து எருமை மாட்டிறைச்சி மற்றும் மீன்களை வாங்கி உணவாக கொடுத்து சுனீத் வளர்த்தார்.

ஒரு கட்டத்தில் நன்றாக குணமடைந்ததும் தனக்குரிய ஆக்ரோஷத்தில் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை பருந்து தாக்கியது. இதனால், சுனீத் வேறு இடத்தில் கொண்டு சென்று பருந்தை விட்டார். பிறகு, அங்குள்ள பருந்துகளுடன் சேர்ந்து அந்த பருந்து வாழத் தொடங்கியது. ஆனால், 6 மாதங்களில் சுனீத் வீட்டுக்கு மீண்டும் திடீரென்று அந்த கழுகு வந்தது. இதைப் பார்த்ததும் சுனீத் ஆச்சரியமடைந்தார். கழுகுக்கு பிடித்த எருமைமாட்டிறைச்சியை கொடுத்து சுனீத் வரவேற்றார். அப்போதிருந்து, சுனீத் வீட்டுக்கு வருவதும் செல்வதுமாக பருந்து இருந்து வருகிறது. கொரோனா லாக்டவுனுக்கு முன் தன் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஞ்சேரி பகுதிக்கு கொண்டு சென்று அந்த பருந்தை சுனீத் விட்டு வந்தார். ஆனாலும், அந்த பருந்து மீண்டும் சுனீத்தின் வீட்டுக்கு பறந்து  வந்து விட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments