கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட 3 மாதங்கள் வரை உடல்நிலை மாற்றங்கள் கண்காணிக்கப்படும்- ஐசிஎம்ஆர்

0 2650
கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட 3 மாதங்கள் வரை உடல்நிலை மாற்றங்கள் கண்காணிக்கப்படும்- ஐசிஎம்ஆர்

கோவாக்சின் தடுப்பு மருந்தை இரண்டாம் முறை செலுத்திக் கொண்ட பின் அவர்களின் உடல்நிலை குறித்து 3 மாதங்கள் வரை கண்காணிக்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி இயக்க வழிகாட்டு நெறிகளில், முதல் தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்குப் பின் அவர்கள் மீண்டும் வந்து இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாம் முறை தடுப்பூசி போட்டபின் அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து 3 மாதங்கள் கண்காணிக்கப்படும் என்றும், இந்தக் காலத்தில் பக்கவிளைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதுடன், தடுப்பூசி போட்ட மையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments