”ஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன்’ஏழை எளியோருக்கு உதவுவதே லட்சியம்-ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி பேட்டி
தந்தையை இழந்த பின் உறவினர் வீட்டில் தங்கி ஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்த மாணவி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 430 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே உள்ள ஆவூரைச் சேர்ந்த மாணவி பர்கத் நிஷா, தந்தையை இழந்த நிலையில் தனது உறவினர் வீட்டில் தங்கி ஆடு மாடு மேய்த்துக் கொண்டே படித்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்குச் சேர்ந்துள்ளார்.
எம்.எஸ். படிப்பு படித்துத் தன்னைப் போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கு உதவுவதே லட்சியம் என அவர் தெரிவித்தார்.
Comments