நடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 4பேரை தேடும் பணி தீவிரம்

0 1170
நடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 4பேரை தேடும் பணி தீவிரம்

நடுக்கடலில் மாயமான ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில்  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த  4 பேர், கரை திரும்பவில்லை. 

அவர்களை தேடும் பணியில் சக மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சார்லி, ராணி துர்கா தேவி ஆகிய 2 கப்பல்களும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாயமான மீனவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி கோட்டைப்பட்டிணத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments