வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

0 4307
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments