தமிழகம் முழுவதும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்
தமிழகம் முழுவதும் முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிமுக வகுப்புகள் இன்று துவங்கினாலும், கொரோனா அச்சம் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மாணவர்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணவர்கள் ராகிங் செய்யப்படுவதை தடுக்கவும், மருத்துவப் படிப்பு குறித்து ஆலோசனை வழங்குவதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
கல்லூரிக்கு வரும் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றோரின் விருப்பத்தை பொறுத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Comments