காசிரங்காவில் சுற்றித்திரிந்த காண்டாமிருகம் பிடிக்கப்பட்டது
அஸ்ஸாம் காசிரங்கா தேசிய வனவிலங்கு மற்றும் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய ஒரு பெரிய காண்டாமிருகம் பல இடங்களில் சுற்றித் திரிந்து பீதியைக் கிளப்பி வந்த நிலையில் அதிகாரிகள் அதனை மீண்டும் சிறைப்பிடித்தனர்.
கடந்த 16ம் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்த காண்டாமிருகம் 18ம் தேதி பிரம்மபுத்திரா ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள திகலி, ஜமுகுரி போன்ற பகுதிகளில் நடமாடி வந்தது.
அந்த காண்டாமிருகத்தை ஒருவழியாக மீண்டும் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி மூலம் பிடித்து கவுஹாத்தி வனவிலங்குப் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்
Comments