திருச்சி சூரியூரில் உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டி
மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 15ஆம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஒன்றாம் தேதியே பந்தக்கால் நட்டு முறைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கனமழை காரணமாக போட்டி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 550 காளைகளுடனும் 450 மாடுபிடி வீரர்களுடனும் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.
வழக்கமாக நடைபெறும் பெரியகுளம் திடலில் மழைநீர் தேங்கியதால் அருகிலுள்ள தனியார் திடலில் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Comments