கொரோனா வந்து அதிலிருந்து மீண்டதாக சானியா மிர்சா தகவல்

0 2979

டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதிலிருந்து தாம் முழுமையாக மீண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் .

ஜனவரி மாதத் தொடக்கத்தில் தமக்கு நடந்த பரிசோதனையில் தெரிய வந்ததாக ட்விடடர் பதிவில் குறிப்பிட்டுள்ள சானியா,  கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது சாதாரண ஜோக் அல்ல என்றும் அனைவரும் இதனைத் தீவிரமாகக் கருதி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடவுளின் அருளால் தாம் குணமாகி பூரண உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தமது இரண்டு  வயது குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து இருப்பது மிகவும் வேதனையளித்தது என்றும் சானியா மிர்சா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments