பிரைவசி கொள்கையை கைவிடுங்கள் - வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம்
தனிநபர் தகவல்கள் குறித்து புதிய கொள்கையை திரும்பப் பெறும் படி வலியுறுத்தி வாட்ஸ் ஆப்புக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் வாட்ஸ் ஆப் புதிய கொள்கையை அறிவித்தது. புதிய நிபந்தனைக்கு உட்படாதவர்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் தங்கள் தகவல்களை இழந்துவிடுவார்கள் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதிய கடிதத்தில் வாட்ஸ் ஆப்பின் புதிய விதிகள் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான பத்து கேள்விகளை எழுப்பியுள்ள மத்திய அரசு ,வாட்ஸ் ஆப் அறிவித்த புதிய கொள்கையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.
Comments