மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன்ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி சந்திப்பு

0 1500
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன்ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டி சந்திப்பு

டெல்லி பயணம் மேற்கொண்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது உள்பட முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

போலாவரம் திட்ட மதிப்பீடு , ஆந்திராவுக்கான நிதி ஒதுக்குவது போன்றவை குறித்தும் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவுக்கு பல்வேறு திட்டங்களுக்கான நிலுவையில் உள்ள ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை விரைவில் வழங்கும்படியும் ஜெகன்மோகன் ரெட்டி அமித் ஷாவிடம் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments