சித்ரா தற்கொலை அன்று நடந்தது என்ன?

0 75404
சித்ரா தற்கொலை அன்று நடந்தது என்ன?

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேம்நாத்தும் அவரது நண்பரும் பேசும் செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக பல புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டாலும், இருவருக்குமான பிரச்சனை என்ன ? சித்ராவின் மன உளைச்சலுக்கு இது தான் காரணம் என குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு பல்வேறு குழப்பங்களும் இந்த வழக்கில் நீடித்து வருகின்றன.

இந்த நிலையில், சித்ரா கணவர் ஹேம்நாத் அவரது நண்பர் ரோகித்துடன் பேசும் சுமார் 30 நிமிட செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, தான் சித்ராவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லவில்லை என்று கூறும் ஹேம்நாத், சித்ரா தான் தனியாக தனது காரில் சென்று வந்ததாகவும் கூறுகிறார்.

சித்ராவின் அம்மாவை குற்றம்சாட்டும் ஹேம்நாத், சித்ரா அறைக்கு திரும்பியதும் இனி தான் திருவான்மியூர் வீட்டிற்கு செல்ல முடியாதா? திருமண வேலைகளை தனியாகத்தான் பார்க்க வேண்டுமா? என கேட்டதாகவும், சித்ரா மூன்று கோடி செலவு செய்து கட்டிய திருவான்மியூர் வீட்டிற்கு இனி செல்ல முடியாதா என கேட்டு வருந்தியாகவும் கூறுகிறார்.

அறைக்கு திரும்பிய பிறகு சித்ரா சோர்வாக காணப்பட்டதாவும், குடும்பத்தில் இருந்து தன்னை பிரித்து விட்டார்கள் என மனம் வெதும்பி பேசியதாகவும் தொலைபேசி உரையாடலில் ஹேம்நாத் கூறுகிறார். பின்னர் புகைப்பிடிக்க வெளியில் சென்றதாகவும், திடீரென அறைக்கு சென்று கதவை சித்ரா தாழிட்டு கொண்டதாக கூறும் ஹேம்நாத், 'வில்லா" விடுதி அலுவலகத்தில் மாற்று சாவி கேட்டு ஊழியருடன் வந்து திறந்து பார்த்து போது அவர் தூக்கிட்ட நிலையில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

தனக்கு கொடுத்த சத்தியத்தை மீறி அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடினாயா? என கேட்டதாகவும், அது சிறு பிரச்சனை தான் உடனே சரியாகிவிட்டது என்றும் பேசியுள்ளார். மூன்று நாட்களாக அவரது தாயார் கொடுத்த தொந்தரவால் தான் சித்ரா கஷ்டத்தில் இருந்தார் எனவும் ஹேம்நாத் பேசியுள்ளார்.

தற்கொலைக்கு காரணமானவர் சித்ராவின் தாயார் தான் என அவ்வப்போது அவரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்கும் ஹேம்நாத், அவரது தாயார் எந்த அளவிற்கு டார்ச்சர் செய்வார் என்பதை தான் கண்கூடாக பார்த்ததாக கூறுகிறார்.

தொடர்ந்து பேசிக் கொண்டிடேயிருந்த ஹேம்நாத் ஓரிடத்தில் மெல்லிய குரலில் எதிர்முனையில் இருந்த ரோஹித்திடம், அறைக்கு திரும்பிய சித்ராவின் தலையில் காயம் இருந்ததை தான் பின்னர் கவனித்ததாகவும், படப்பிடிப்பு முடிந்து சித்ரா எங்கு சென்று வந்தார் ? என்ன பிரச்சனை என தனக்கு தெரியவில்லை என ரகசியம் சொல்வது போல் கூறுகிறார்.

திடீரென சித்ராவின் அம்மாவை சும்மா விட மாட்டேன் என ஆவேசமடையும் ஹேம்நாத், தானும் சித்ராவை போலவே இறந்துவிடுவேன் என அழுகிறார். 30 நிமிடங்கள் வாட்ஸ் அப் காலில் பேசியதை தடய அறிவியல் துறை, சைபர் லேப் மூலம் காவல் துறை பதிவை எடுத்துள்ளதாக கூறப்படும் இந்த உரையாடல் சித்ரா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments