இவ்வளவு தாங்க நம்ம ஊர் அரசியல்..! சாமானியர்களின் புரிதல்
ஈரோடு மாவட்டம் ஆவுடையார் பாறை கிராமத்தில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தனக்கு பா.ஜ.க என்கிற கட்சி இருப்பதே தெரியாது என்று கூறி கலகலப்பூட்டினார்.
தான் அணிந்திருக்கும் பனியனில் அச்சிடப்பட்டிருப்பது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் முகம் என்பதை கூட அறிந்திராமல் குளிருக்கு பனியன் போட்டுள்ளேன் என கூறும் இந்த சாமனியர் தான், தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு அரசியல் மீதான புரிதல்..!
ஈரோடு மாவட்டம் ஆவுடையார் பாறை கிராமத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் பாரதீய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. விவசாய அணித்தலைவர் ஜி.கே. நாகராஜ் முன்னிலையில் ஒவ்வொருவராக பாரதீய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் படம் போட்ட பனியனுடன் வந்த 70 வயது முதியவரை அழைத்து தங்கள் கட்சியின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறிய ஜி.கே. நாகராஜ் , பாரதீய ஜனதா கட்சி தெரியுமா எனக்கேட்டார், அதற்கு அந்த பெரியவர் தனக்கு தெரியாது என்றார், பா.ஜ.க தலைவர் யார் தெரியுமா ? பா.ஜ.க சின்னம் தெரியுமா ?என கேட்க அவர் வெள்ளந்தியாக தெரியாது என்றார்.
அடுத்து அந்த முதியவரிடம் வேறு கட்சிக்கு செல்ல மாட்டீர்கள் அல்லவா, என உறுதிப்பெற்றுக் கொண்ட ஜி,கே நாகராஜ், அவருக்கு பாரதீய ஜனதா கட்சியின் சின்னம் மற்றும் தலைவர்களின் பெயர்களை எடுத்துக் கூறினார்
பின்னர் அந்த முதியவருக்கு காவித்துண்டுடன் , குளிருக்கு இதமாக சால்வை அணிவித்ததும் கூடியிருந்த தொண்டர்கள் தாமரைக்கு ஓட்டளிக்க வேண்டுகோள் விடுத்தனர்.
அதே நேரத்தில் தேவை என்றால் கூட்டமாக கோஷம் போடுறதும், தேவையில்லை என்றால் மாற்றுக்கட்சிய நோக்கி ஓடுறதும் தான் அரசியல் புரிதல்..! என்று கற்றுக் கொடுக்கும் இந்த காட்சிகளை பார்க்கும் போது, இவ்வளவு தாங்க தமிழக அரசியல்...! என்று நமக்கு உரக்க சொல்கின்றது..!
Comments