தமிழக அரசின் பயிற்சி மையத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து விடுதியில் தங்கியிருந்த நபர் பிடிபட்டார்
சென்னையில் ஐஏஎஸ், யுபிஎஸ்சி தேர்வர்களுக்கான தமிழக அரசின் பயிற்சி மையத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்பித்து விடுதியில் தங்கியிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச் சாலையில் செயல்படும் அந்த மையத்தில் ஆண்டிற்கு 345 பேருக்கு அரசு செலவில் உணவு, விடுதியுடன் இலவசமாக பயிற்சியும் வழங்கப்பட்டு வந்தது.
அண்மையில் நடந்த யுபிஎஸ்சி முதன்மை தேர்வை எழுதாமல் விடுதியிலேயே இருந்த ராஜ் மஸ்தான் குறித்து விசாரித்தபோது, அவரிடம் இருந்த ஹால் டிக்கெட் போலியானது என தெரியவந்துள்ளது.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை போலியாக தயாரித்து வைத்து அந்த நபர் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்திருப்பதாக அவர் வைத்திருந்த சான்றிதழின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Comments