வாட்ஸ்அப் ஒருதலைப்பட்சமாக பிரைவசி பாலிசியை மாற்றியமைத்தது நியாயம் அல்ல-மத்திய அரசு
பிரைவசி பாலிசியில் வாட்ஸ்அப் ஒருதலைப்பட்சமாக பிரைவசி பாலிசியை மாற்றியமைத்தது நியாயம் அல்ல என மத்திய அரசு கூறியுள்ளது.
வாட்ஸ்அப் சிஇஓ Will Cathcart-க்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், பிரைவசி பாலிசி மாற்றங்களும், அதுதொடர்பான நிபந்தனைகளும் பயனாளர்களின் தேர்வு வாய்ப்புகள் மற்றும் சுயேச்சைத் தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கவலை ஏற்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய பயனாளர்கள் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் என்றும், ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது. எனவே பிரைவசி பாலிசி மாற்றங்களை திரும்பப் பெற்று, டேட்டா பாதுகாப்பு, சுதந்திரம், தகவல்களின் அந்தரங்க தன்மை குறித்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
Comments