ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை-மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதமும், தமிழக பாடத்திட்டத்தில் 40 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும், கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், ஜேஇஇ, நீட் தேர்வுகளில் வினாக்களைத் தேர்ந்தெடுத்து விடையளிப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ மெயின் தேர்வில் மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து ஏதேனும் 75 கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Comments