'என்.. ஏரியாவுக்கு வந்துராத உக்கிரமாக இருப்பேன்!' டிம் பெயினுக்கு அசத்தலாக பொருந்திய வடிவேலு காமெடி

0 82782

ஆஸ்திரேலிய அணியை பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் இந்திய அணி தோற்கடித்ததே இல்லை. கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இல்லாத நிலையில் இந்தியாவின் இளம் படை கப்பாவில் ஆஸ்திரேலிய அணியை வெளுத்து வாங்கி வெற்றி பெற்றது. இதனால்,  சிட்னி டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணி வீரர் அஸ்வினை கப்பாவுக்கு  வா... பார்த்துக் கொள்கிறேன் என்று ஆணவத்துடன் அழைத்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு சம்மட்டி அடியும் விழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொரை கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் களமிறங்கினார். இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நடராஜனிடத்தில் வெற்றிக் கோப்பையை கொடுத்து கேப்டன் ரகானே பாராட்டினார்.இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து அனல் பறக்கும் மீம்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்பாக நடிகர் வடிவேலு இயக்குநர் சி. சுந்தர் நடித்த என் ஏரியாவுக்கு வந்திடாதே அங்க நா உக்கிரமா இருப்பேன் என்ற காமெடியின் காட்சிகள் டிம் பெயினுக்கு  அச்சு அசத்தலாக பொருந்துகிறது. அந்த மீமின் படி அடிலெய்ட் டெஸ்டில் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும் டிம் பெயின் பிரிஸ்பேன் டெஸ்டில் காலில் விழுந்து விடுகிறார்.  சமூகவலைத் தளங்களில் இந்த மீம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மீமின் உண்மையான அர்த்தம் டிம் பெயினுக்கு தெரிந்தால் தன்னைத் தானே நொந்து கொள்வார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments