தம்பி மனைவியை கழுத்தில் குத்திக் கொலை செய்த நபர் போலீசில் சரண்

0 26573
திருவாரூரில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், தம்பி மனைவியை கழுத்தில் குத்திக் கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்தார்.

திருவாரூரில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், தம்பி மனைவியை கழுத்தில் குத்திக் கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்தார்.

பெங்களூரில் மென்பொருள் பொறியாளர்களாக பணிபுரிந்த சுந்தரமூர்த்தி - சொர்ணப்பிரியா தம்பதியினர், ஊரடங்கு காரணமாக, திருவாரூருக்கு வந்து வீட்டில் இருந்தே வேலை செய்து வந்துள்ளனர்.

அண்ணன் ராஜகோபாலுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சுந்தரமூர்த்தி, பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு அண்ணனுக்கு 15 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

கொடுத்த பணத்துக்கு பதிலாக பள்ளி நிர்வாகத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என தம்பி மனைவி கேட்கவே, இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கூட்டுக்குடும்பத்தில் பிரச்சனை வர தம்பி மனைவி தான் காரணம் என கருதிய ராஜாகோபால், ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments