மும்பையில் சைக்கிள்-ஷேரிங் மலிவான போக்குவரத்து முறையாக இருக்கும் - ஆய்வு தகவல்
மும்பையில் பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துபவர்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் இறங்கிய பிறகு, தாங்கள் சென்று சேரவேண்டிய இடம் வரை பயணிப்பதற்கு சைக்கிள் மலிவான போக்குவரத்து முறையாக இருக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
மும்பையில் 2 மெட்ரோ நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சைக்கிள்-ஷேரிங் முறையைப் பயன்படுத்தி, 5 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 2 ரூபாய் மட்டுமே செலவாகிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, பயணிகள் சைக்கிளில் செல்லும்போது விரும்பிய வழியிலும் செல்ல முடியும். இந்தியாவில் வாகனப் போக்குவரத்தில் 35 சதவீதம் 5 கிலோமீட்டருக்கும் குறைவான குறுகிய தூர பயணங்கள் என்ற நிலையில், இதற்கு சைக்கிள்-ஷேரிங் முறை என்பது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments