'என்ன தல இந்த டைம் வாய்லயே போட்டுட்டாங்களோ!' - கப்பாவில் கோப்பையை பறி கொடுத்த டிம் பெயின்

0 52015

பிரிஸ்மேன் கப்பா மைதானத்தில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார சாதனை படைத்துள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 1.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை கொட்டியது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மழையால் நேற்றைய தினம் 22 ஓவர்கள் இந்தியா ஆட முடியாத நிலை ஏற்பட்டது.

5 வது நாளான இன்று இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 324 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை இறுதிநாளில் எட்டுவது சுலபமல்ல. பிரிஸ்பேன் ஆடுகளத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் தென்பட்டதால் பந்தும் எகிறியது. கடைசிநாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் களம் இறங்கினர். ரோகித்சர்மா 7 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன், புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடினார்.image

சப்மன் கில் அபாரமாக விளையாடி 146 பந்துகளில் 91 ரன்களை எடுத்தார். புஜாரா உடல் முழுவதும் அடி வாங்கினாலும் இந்திய அணிக்கு சுவர் போல நின்றார். 56 ரன்கள் அடித்த புஜரா அவுட் ஆக, கேப்டன் ரகானே 22 பந்துகளில் 24 ன்களை எடுத்தார். அடுத்து , களமிறங்கிய ரிசப் பண்ட் வழக்கம் போல ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். ரிசப் பண்டுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பக்கபலமாக நின்றார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி எளிதாக அழைத்து சென்றது. ரிசப் பண்ட் 89 ரன்களுடன் களத்தில் இருந்தார். வாஷிங்டன் சுந்தர் தன் பங்குக்கு 22 ரன்களை எடுத்தார்.

கடந்த, சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு சர்சையில் சிக்கினார். அப்போது, அடுத்த போட்டி கப்பாவுல நடக்குது. அங்கே வா.... பார்த்துக்குவோம் என்கிற ரீதியில் டிம் பெயின் பேசியிருந்தார். ஏனென்றால், பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வெற்றி கண்டதே இல்லை. அந்த ஆணவத்தில்தான் டிம் பெயின் அப்படி பேசியிருந்தார். தற்போது, பிரிஸ்பேன் மைதானத்திலும் இளம் காளைகள் ரிசப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் உதவியுடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. , ஆணவத்தில் பேசிய டிம் பெயினை பார்த்தால் வின்னர் படத்தில் வரும், 'தல இந்த டைம் அடி கொஞ்சம் ஓவரோ' என்கிற காமெடி காட்சிகள்தான் நினைவுக்கு வந்து போகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments