கொடியேற்றத்துடன் தொடங்கிய தைப்பூச திருவிழா
திருச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைபூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்களைக் கொண்டு வேதமந்திரங்கள் முழங்கவும், தங்க கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்தும் கொடி ஏற்றப்பட்டது.
நெல்லையில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் இன்று காலை தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடிபெற்றன. முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வரும் 22- ந்தேதியும், 28ம் தேதி தைப்பூசத் தீர்த்த வாரியும் நடைபெறுகிறது.
Comments