வேகமாக வந்த BMW கார் தூக்கிவீசப்பட்ட காவலர்கள் பதறவைக்கும் சிசிடிவி

0 9685
அதிவேகமாக வந்த கார்மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆயுதப்படை காவலர் பலி

சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த பிஎம்டபிள்யூ கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் ஆயுதப்படை காவலர்கள் இருவர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் ஆயுதப்படையில் பணிபுரிந்த ரவீந்திரனும், கார்த்தியும் ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பாதுகாப்பு பணிக்காக பைக்கில் வந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் பகுதியில் வந்த அவர்கள் வளைவில் திரும்ப முயன்ற போது, அவ்வழியாக வேகமாக வந்த பி.எம்.டபுள்யூ கார் மோதி தூக்கிவீசப்பட்டனர்.

விபத்தில் ரவீந்திரன் எனும் காவலர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மற்றொரு காவலர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்று மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் காவலர் கார்த்தியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். ஆனாலும் கார்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய பி.எம்.டபுள்யூ கார் நொளம்பூரை சேர்ந்த வருண் சேகர் என்ற கல்லூரி மாணவருடையது என கண்டறிந்த நிலையில், தனது நண்பர்களுடன் கே.கே.நகரில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நொளம்பூருக்கு திரும்பிய போது விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவரை கைது செய்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments