கருப்புச் சந்தைகளின் ரகசியங்களை விளக்கும் தொலைக்காட்சித் தொடர்: உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று படமாக்கிய பெண் செய்தியாளர்
உலகின் அடர் இருட்டில் இயங்கும் தலைமறைவு கருப்புச் சந்தைகள் குறித்த ரகசியங்களை விளக்கும் புதிய தொலைக்காட்சித் தொடரை பத்திரிகையாளரான மாரியானா வான் ஜெல்லர் இயக்கியுள்ளார்.
மெக்சிகன் கார்டல் பைப்லைன் , தென்கிழக்கு ஆசியாவில் புலியின் எலும்புகள் கண்டெடுப்பு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் பெருவின் அச்சகங்கள், தென் அமெரிக்காவில் இருந்து புளோரிடாவுக்கு கோகெய்ன் கடத்திவரும் கும்பல்கள், போலி முதலீட்டு நிறுவனங்கள் என பல பயங்கரமான செயல்பாடுகளை இத்தொடர் அம்பலப்படுத்துகிறது.
இதனைப் படம் பிடிக்க தமது குழுவினருடன் பத்து மாதங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளுக்கு மாரியானா பயணம் செய்தார். கோவிட் காரணமாக உலகின் கருப்புச் சந்தைகளின் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார் மாரியானா
Comments