வரும் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு

0 1549

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

நந்திகிராமில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஊழலில் சேர்த்த பணத்தைக் காத்துக்கொள்ளப் பலரும் கட்சி மாறி பாஜகவில் சேர்ந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

வரும் தேர்தலில் நந்திகிராமிலும், தனது சொந்தத் தொகுதியான பவானிப்பூரிலும் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் நந்திகிராமில் வெற்றிபெற்ற சுவேந்து அதிகாரி கடந்த மாதம் பாஜகவில் சேர்ந்தார்.

அவரை நேருக்குநேர் எதிர்க்க மம்தா முடிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments