தீனா பேசிய கருத்துக்கு இளையராஜா மறுப்பு : தீனா பேட்டியால் குழப்பம்
தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுகளை இசையமைப்பாளர் இளையராஜா மத்திய அரசுக்கு திருப்பி அளிக்க இருப்பதாக தீனா தெரிவித்த தகவல் தவறானது என்று இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை நும்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, தனக்கு கிடைத்த விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் இளையராஜா இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் பிறகு வெளியிட்ட வீடியோவில் தாம் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக தீனா விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே இளையராஜாவும் விருதுகளை திருப்பி அனுப்ப உள்ளதாக தீனா கூறிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Comments